முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை விதிப்பு

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலியாக டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், ஆகஸ்டு 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே, சுதந்திர தினத்தன்று நாட்டில், தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை

இதையடுத்து, இன்று முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடியும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை, டெல்லி செங்கோட்டைக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு இந்திய தொல்லியல் துறை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி!

Niruban Chakkaaravarthi

தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

Ezhilarasan

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம்

Jeba Arul Robinson