இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 30,946,074 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது 4,29,946 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 624 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 4,11,408 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,000 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,01,04,720 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் 37,14,441 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 38,76,97,935 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.