ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் – மத்திய நிதியமைச்சகம்

ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான்,…

ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும்தான், பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும், மற்றபடி வங்கித் தேர்வுகள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கில மொழியில், மட்டுமே நடத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வங்கியில் ஆள்சேர்ப்பு நிறுவனம், ஊடக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், வங்கி தேர்வுகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்படும், எனத் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலர் நிலை ஒன்று ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் மட்டும், கொங்கணி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும் மற்ற வங்கித் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே, நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில், தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 15 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும் என்றும் அதுவரை வங்கியில் ஆள்சேர்ப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள, தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.