பீகாரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர், பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்தில் உண்டியல் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ஜெய்பிரகாஷ். இவர், புதிய முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்தில் உண்டியல்களை செய்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தபோது இந்த யோசனை தோன்றியதாக ஜெய்பிரகாஷ் கூறுகிறார். பிரதமர் மோடி நாட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து காக்கும் வேளையில், மக்கள் பணத்தை சேமிக்கும் வகையில் இந்த முயற்சியில் இறங்கியதாக அவர் தெரிவித்தார்.
உலகின் சிறந்த பிரதமர் மோடி என்ற வாசகத்தை உண்டியலில் பொறித்துள்ளதாக கூறும் இவர், இதன் மூலம் பிரதமர் மோடியைப் பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உண்டியல்களை தயாரித்தப் பின்னர் சந்தைகளில் விற்பனை செய்யத் தொடங்கியதாகவும், ஆனால் இதுவரை தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் ஜெய்பிரகாஷ் வருத்தம் தெரிவித்தார்.








