தொலைக்காட்சியில் புகையிலை, மதுபான விளம்பரங்கள்; மத்திய அரசின் நடவடிக்கை என்ன ? -அன்புமணி கேள்வி

தொலைக்காட்சியில் மறைமுகமாக புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதற்கு  மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.  தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளில், மறைமுகமாக புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்கள் இடம்பெறுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என,…

தொலைக்காட்சியில் மறைமுகமாக புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதற்கு  மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. 

தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளில், மறைமுகமாக புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்கள் இடம்பெறுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், தொலைக்காட்சிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகளில் புகையிலை மற்றும் ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சின்னங்களை மறைமுகமாக விளம்பரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நிறுவனங்கள் செலவிட்டு மறைமுகமாக விளம்பரம் செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இதனை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஏற்கனவே மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்திடும் நிறுவனங்களுக்கு அவ்வப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தொலைக்காட்சி மட்டுமின்றி OTT தளத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.