முக்கியச் செய்திகள் விளையாட்டு Instagram News

கடைசி டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழப்பு

இந்தியா-வங்கதேசத்துக்கான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து இந்தியா- வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அந்த அணியின் ஜாகிர் ஹசன் 24ரன்களிலும் , நஜ்முல் ஹொசைன் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மொமினுல் ஹக் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். மறுபுறம் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷாகிப் அல் ஹாசன் 16 ரன்கள், ரஹீம் 25 ரன்கள், லிட்டன் தாஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் சிறப்பாக ஆடிய மொமினுல் ஹக் அரைசதம் அடித்து 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதில் 73.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு வங்காளதேச அணிஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

Jayasheeba

ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை