நியூயார்க் டைம் சதுக்கத்தில் இளையராஜா புகைப்படம்

இசையமைப்பில் தனி முத்திரை பதித்த இளையராஜாவுக்கு, மகுடம் சூட்டும் வகையில், நியூயார்க் டைம் சதுக்கத்தில் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே,…

இசையமைப்பில் தனி முத்திரை பதித்த இளையராஜாவுக்கு, மகுடம் சூட்டும் வகையில், நியூயார்க் டைம் சதுக்கத்தில் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே, அவரை இசைஞானி என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், இளையராஜா.

1976-ல் அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில், அறிமுகமான இளையராஜா, தனது இசையால், உலகெங்கும் உள்ல ரசிகர்களின் மனதில், தனி இடம் பிடித்தவர். இளையராஜாவின் இசையை போற்றும் வகையில், பிரபல பாடல் ஆப் நிறுவனமான Spotify, இசையின் ராஜா எனும் வாசகத்துடன், இளையராஜாவின் படத்தை நியூயார்க் சதுக்கத்தில் இடம் பெற செய்துள்ளது.

நேற்று காட்சிப்படுத்தப்பட்ட இளையராஜாவின் புகைப்படம், நாளை வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த புகைப்படம், அவரது ரசிகர்களால், சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.