இசைவாணியை வாழ்த்திய இசைஞானி இளையராஜா!

உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்யப்பட்டிருக்கும் இசைவாணியை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். ’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் பாடகி இசைவாணியை சமீபத்தில் உலகின் சிறந்த 100…

உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்யப்பட்டிருக்கும் இசைவாணியை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் பாடகி இசைவாணியை சமீபத்தில் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்ணும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களை பாடிய இசைவாணியை, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply