ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக இன்று 15 அமைச்சர் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அஷோக் கெலாட் தலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்காக நேற்று இரவு மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து இன்று புதிதாக 15 அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இதில் சச்சின் பைலாட்டின் ஆதரவாளர்கள் 5 பேரும் அடங்குவார்கள். முன்னதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங், 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் மூன்று எம்.எல்.ஏக்கள் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். இதனையடுத்து புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று மாலை பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெறும்.
2022ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது அம்மாநில அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.








