தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்ற உத்தரவை மாற்றி திரையுலகை காப்பாற்ற வேண்டும் என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்கில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என கூறியுள்ளார்.
மேலும், 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப் படுவது போலவே விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் திரையரங்குகளில் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டும் என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement: