சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக பற்றாக்குறை காரணமாக…

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 1.5 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 1 லட்சம் கோவேச்சின் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த தடுப்பூசி கையிருப்பு 6.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு 70% பேருக்கும் நேரில் வருப்பவர்கள் 30% பேர் என மொத்தம் 100% பேருக்கு கோவாஷில்ட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி கோவாக்சின் தடுப்பூசி 2ம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 1,66,41,262 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.