“தவறு செய்வது மனிதம்…மன்னிப்பது தெய்வீகம்…” – மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா!

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியிருந்த நிலையில்,  ‘மன்னிப்பது தெய்வீகம்’ என்று நடிகை த்ரிஷா X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,  நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய…

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியிருந்த நிலையில்,  ‘மன்னிப்பது தெய்வீகம்’ என்று நடிகை த்ரிஷா X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,  நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.  இதற்கு நடிகர் த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நடிகர் மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜரானார்.

இதையும் படியுங்கள் : BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் – ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி

மேலும் இன்று நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூல் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது என காவல் அதிகாரி அம்மையார் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்து விட்டேன். எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக… ஆமீன்…” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை நடிகர் த்ரிஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.  இது தொடர்பாக த்ரிஷா தனது X தள பக்கத்தில்,  “தவறு செய்வது மனிதம்….மன்னிப்பது தெய்வீகம்….” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.