முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த போராட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில், “மானியத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு சேவை அளிக்கும் பணியை மட்டுமே மாநிலத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் செய்திட வேண்டும்.

ஆனால் இந்த மசோதாவில் உள்ள 26,28 மற்றும் 32வது பிரிவுகள் தேசிய மின்பகிர்மான மையத்துக்கு அதிகாரங்களை வழங்க வகை செய்கின்றன. இதன் மூலம், மாநிலங்களில் உள்ள மின்பகிர்மானங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வழி ஏற்படுத்திவிடும்.

எனவே, மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021ஐ திரும்பப்பெற வேண்டும்.” என முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக மின் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல பிப் 1ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அனைத்து மண்டல தலைமை பொறியாளருக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புயல் சேதத்தை பார்வையிடுகிறார் பிரதமர்!

அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

Halley Karthik

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடாலும் விலகல்

Gayathri Venkatesan