பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பட்டியலை அனுப்ப, மின்வாரிய பொறியாளர்களுக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மின் வாரிய பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக சேர்ந்த நாளினை அடிப்படையாக கொண்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு, முதன்மை வரிசைப்பட்டியலும், பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு சில மின்பகிர்மான வட்டங்களில், கோட்ட வாரியான பட்டியலின் அடிப்படையில், பதவி உயர்வுகள் வழங்கப்படுவது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, முதன்மை வரிசைப்பட்டியல் எப்படி தயார் செய்யப்படுகிறது? என்பதை ஆய்வு செய்து, பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பட்டியலை, முழு விவரத்துடன் அனுப்ப, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.







