முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் ஊழியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்ட தகவலில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மருத்துவக் காப்பீடு

மேலும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை, காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் மாதந்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்றும், இந்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும் மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போராட்டம் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

Saravana

யார் இந்த கபில் சிபல்?

EZHILARASAN D

குறையும் ஏற்றுமதி, அதிகரிக்கும் இறக்குமதி; நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்தா?

G SaravanaKumar