தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்புகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்ட நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு விவேகானந்தர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு அமைத்தால் மதுராவை போல் ஆன்மீக மாவட்டமாக கும்பகோணம் மாற்றப்படும் என்றும், அவ்வாறு செய்தால் கும்பகோணத்தில் சுற்றுலா துறை மேம்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சத்துமாவு தொடர்பாக அனிதா டெக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம் வழங்காததை வரவேற்பதாகவும், நாங்கள் குற்றம் கூறியதால் தான் அந்த நிறுவனத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடத்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது தவறு என்று நாங்கள் கூறுகிறோம் என்றார் .
தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் சனாதன தர்மம் பற்றி பேசியுள்ளார். சனாதன தர்மம் என்பது அனைவரும் சமம். இதில் கீழ் ஜாதி, மேல் ஜாதி என பாகுபாடு கிடையாது. தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களில் விதிமீறல் உள்ளது. இது குறித்து அரசிடம் விளக்கம் கேட்கப்படுகிறது . அரசு விளக்கம் அளிக்க காலதாமதம் ஆவதால் தான் ஆளுநரிடம் கோப்புகள் தேங்கிக் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிகம் இருப்பதாகவும் ,தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்புவதாகவும், கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 58% பேர் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாதவர் என அண்ணாமலை தெரிவித்தார்.