அரசு பள்ளிக்குப் பூட்டு; மாணவர்களின் கல்வி?

தானமாகக் கொடுத்த இடத்தை மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தட்டா ஊரனியில் அரசுக்குச் சொந்தமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…

தானமாகக் கொடுத்த இடத்தை மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தட்டா ஊரனியில் அரசுக்குச் சொந்தமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கடந்த 28 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 42 மாணவர்களும் அங்கன்வாடியில் 25 குழந்தைகளும் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அதேபகுதியில் வசித்துவரும் சின்னையா என்பவர் அங்குள்ள பள்ளி வளாகத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அமைப்பதற்கும் தனது இடத்தை தானமாக வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவருக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டராக தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்காலிக பணியிலிருந்து அவரை நீக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சின்னையா தானமாகக் கொடுத்த இடத்தை மீண்டும் தனக்கு வேண்டும் எனக் கூறி பள்ளிக்குப் பூட்டுப் போட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’

மேலும், பள்ளி மாணவர்களை வகுப்பறைக்குச் செல்ல விடாமல் சாலையிலேயே அமர வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் யோகரெத்தினம், சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சின்னையா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிக்குச் சேர்க்கப் போவதாகப் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.