சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.
சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஆலோசகர்களைத் தேர்வு செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகத் தரம் வாய்ந்த பிரம்மாண்ட விளையாட்டு நகரம் சென்னைக்கு அருகில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விளையாட்டு நடவடிக்கைகளை பரவலாக்குவதற்காக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேவைக்கேற்றவாறு சிறு விளையாட்டரங்கம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் 25 விளையாட்டு அரங்குகள் உள்ளது. மீதமுள்ள 209 தொகுதிகளில் விளையாட்டு வசதி இல்லாத இடங்களில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது