முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

t10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதுபோலவே வரும் 7ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram