பேராசிரியர், பணியாளர் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. NET, SET, Ph.D., முடித்தவர்கள், தங்களுக்கான வேலைவாய்ப்பை தேர்வு செய்யவும், எந்த உயர்கல்வி நிறுவனத்தில் எந்த இடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை அறியவும் UGC-இன் புதிய வசதி உதவுகிறது.
மேலும், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பேராசிரியர், பணியாளர்கள் பணியிடங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் விரைவாக பதிவேற்றம் செய்யவும், முறையாக பராமரிக்கவும் யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.







