இயக்குநர் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!

திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது மனைவி சிந்து,…

திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது மனைவி சிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.