கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இதுவரை 42,000 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், பிற துறை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply