முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு?

நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் உடலுக்கு இன்று மாலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து, வரும் மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. அதுவரை மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!

Ezhilarasan

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Saravana