ஐசிஎஸ்இ,ஐஎஸ்சி 10,12-ம் வகுப்புப் பொது தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஐசிஎஸ்இ,…

கொரோனா பரவல் காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொர்பாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டல் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 7-ம் தேதிவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டது.


நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி மே மாதம் தேர்வுகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12-ம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வும் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.