கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வானாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மகப்பேறு சிகிச்சைகாக கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி சென்றது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி, செவிலியர் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







