முக்கியச் செய்திகள் தமிழகம்

ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்தக் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் புகார் பதிவேட்டை வைக்கவேண்டும் எனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்புணர்வுகள் – மத்திய அரசு

Halley karthi

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்: முதலமைச்சர்

நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Ezhilarasan