தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு (19-07-2021வரை) நீட்டிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அனைத்து மாவட்டங்களுக்கும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு 12-07-2021 முதல் 19-07-2021 வரை காலை 6 மணி முதல் தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி நீங்களாக இதர மாநிலங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர இதர சர்வதேச விமான போக்குவரத்திற்கு
- திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமூதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கும், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளை பொறுத்தவரை ஏற்கெனவே இரவு 8 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் இதர செயல்பாடுகளை ஜூலை 12 வரை இரவு 9 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள் ஆகியவற்றை இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு எழுத அனுமதி.
அனைத்து கடைகளிலும் அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டும். நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.