முக்கியச் செய்திகள் தமிழகம்

3ம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குண்ணாத்தூரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “வரலாற்றில் இந்நாள் பொன்நாளாகும். கடந்த 1977ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று முதன்முதலாக முதலமைச்சராக எம்ஜிஆர் பணியாற்றிய நாளாகும் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

வீரேந்திர சேவாக்கை கவர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்!

Saravana Kumar

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

Gayathri Venkatesan

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? நீதிமன்றம் கேள்வி!

Ezhilarasan