தமிழகத்தில் கருத்து கணிப்புகள் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 2 ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் மக்களிடையே நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளதாக கூறினார். மக்கள் தாமாகவே முன் வந்து தடுப்பூசியை எடுத்துக் கொள்வதாகவும் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.







