நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்பி, ஏமாற்றி வருவதாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் திமுக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அளிக்கின்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற ஏற்குமா என்பதை முதலமைச்சரும், சுகாதார துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதனால் கிராமப்புற அரசு பள்ளி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.