முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசலா? அண்ணாமலை பதில்

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் சிறிதும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீரன் சின்னமலை கோட்டை பராமரிப்பு, 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை உட்கட்சி பிரச்சனை சிறிதளவும் இல்லை எனக் கூறிய அண்ணாமலை, ஒரு பக்கம் முதியவர், பெரியவர்கள், அரசியல் அனுபவம் உள்ளவர்கள் கட்சியை வழிநடத்துவதாகவும் மற்றொரு பக்கம் தம்மைப் போன்ற இளைஞர்கள் புதிய உத்வேகத்துடன் கட்சியை கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழ்நாடு பாஜகவில் விரைவில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றார். மகாராஷ்டிர மாநிலத்தைப்போல தமிழகத்திலும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கணவன் ஆணவ கொலை?; காவல்நிலையத்தில் இளம்பெண் புகார்

Saravana Kumar

தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்

Gayathri Venkatesan

அவன் – இவன் பட வழக்கு: இயக்குனர் பாலா விடுவிப்பு

Ezhilarasan