தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று…

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா தொற்று 16 ஆயிரத்து 764-ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தினசரி தொற்றின் வேகம் அதிகரிப்பது வைரசின் அதிவேக பரவல் தன்மையை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மாநிலங்கள் தேவைக்கேற்ப தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமாகும்போது ஆரம்ப சிகிச்சையை வீட்டில் இருந்தே பெறும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும், மாவட்ட அளவிலான கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை திறக்குமாறும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் தாமதிக்காமல் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.