முக்கியச் செய்திகள் தமிழகம்

சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் இன்று தொடங்கியது.

சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முன்பு சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு பெற்ற முக்கிய ஆளுமைகள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

இரங்கல் தீர்மானத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அதேபோல் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பாண்டுரங்கன், முஹம்மத்ஜான், பாப்பா சுந்தரம், முனைவர்.அரங்க நாயகம், விஜயன், ராஜி,இராஜேந்திரன், சகாதேவன், சுலோசனா,ராஜூ, இராமசந்திரன்,அன்பழகன், பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் நடிகர் விவேக்கிற்கு இரங்கல் குறிப்பு வாசித்த சபாநாயகர் அப்பாவு “தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் நடிகர் விவேக், அவரின் இழப்பு திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்றார்.

மேலும் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணனின் மறைவு மாணவர் சமுதாயத்திற்கும் உயர் கல்வித்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தின்போது வாசித்தார். இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திர சேகரன் ஆகியோர் பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !

Halley karthi

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

Halley karthi

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

Gayathri Venkatesan