நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மாயமான மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன், அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி…

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மாயமான மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன், அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இருவரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சங்கர சுப்பிரமணியன் ஆழமான இடத்திற்கு சென்ற போது மாயமானார்.

இதை கண்ட அவரது தந்தை சுவாமிநாதன் மகனை காப்பாற்ற சென்ற போது அவரும் ஆழத்தில் மூழ்கி இருக்கிறார் இதனை கண்ட அப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த சிலர் முதலில் சுவாமிநாதனை மீட்டனர் எனினும் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சங்கர சுப்பிரமணியன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விசாரணையில் உயிரிழந்த சுவாமிநாதன் அர்ச்சகர் என்பதும் இருபது வயது நிரம்பிய அவரது மகன் பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

தந்தை மகன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.