ஜூலையில் +2 தேர்வு?

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த உடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்…

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்த உடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த ஏதுவாக அதற்கு முன்பாக Revision Test, Model Exam போன்ற தேர்வுகளை ஆன்லைனில் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு.

இந்த தேர்வுகளை நடத்த WhatsApp-ல் வினாத்தாள்களை அனுப்பி விடைகளை எழுதி வாங்க அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

ஒருவேளை ஜூலையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றால், திருப்புதல் தேர்வு (Revision Test) மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.