முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் நாளை இயங்காது.

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதி முதல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு இரவு நேரங்களிலும்,  ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் சம்மந்தமான கடைகள் மட்டும் நாளை (09-01-2022) இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து வகையான நிறுவனம் மற்றும் கடைகளுக்கு விடுப்பு வழங்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் மதுபானக்கடைகள் நாளை இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை ஊரடங்கு கடைப்பிடிக்கும் சூழலில் நாளை ஒரு நாள் (09-01-2022) அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆபத்தான கட்டிடங்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை-காவல் ஆணையர்

Halley Karthik

கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

Halley Karthik

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டு

Halley Karthik