சட்டமன்ற தேர்தலில் தமாகா தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தற்போதே முழு மூச்சில் இறங்கிவிட்டன. இந்தநிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சித் தலைவர் ஜிகே.வாசன், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சட்டமன்றக்கூட்டத்திலிருந்து மக்களின் குறைகளை தெரிவிக்காமல் எதிர்கட்சிகளின் வெளிநடப்பு செய்வது கண்டனத்திற்குரியது. இதுவரை எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தாத எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் வெற்றிக்காக அவர் பெயரை பயன்படுத்துக்கின்றார். அதிமுக கூட்டணியுடன் இருக்கும் தமாக வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும்” என தெரிவித்தார்.







