கண்களை கட்டி ரூபிக் கியூப் விளையாடி 13 வயது சிறுமி சாதனை

மத்தியப்பிரேதச மாநிலம், இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர், கண்களை கட்டிக் கொண்டு, ரூபிக் கியூப் விளையாட்டு விளையாடி சாதனைப் படைத்துள்ளார். மத்தியப்பிரேதச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் சுஜீத் – அனுபமா தம்பதியினர்,…

மத்தியப்பிரேதச மாநிலம், இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர், கண்களை கட்டிக் கொண்டு, ரூபிக் கியூப் விளையாட்டு விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.

மத்தியப்பிரேதச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் சுஜீத் – அனுபமா தம்பதியினர், அங்கு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு 13 வயதாகும் தனிஷ்கா என்ற மகள் உள்ளார். அதிவேக கற்றல் திறன் கொண்ட இந்த சிறுமி, அம்மாநில பள்ளிக்கல்வித்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, அவரது 11 வயதிலேயே 10ம் வகுப்பு தேர்வையும், 12 வயதில், பிளஸ் 2 தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

தற்போது 13 வயதே ஆகும் அவர் தேவி அஹிலியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்தும் விளையாட்டான ரூபிக் கியூப்பை கண்களை கட்டி விளையாடி சாதனை படைத்துள்ளார். மேலும், இவரது சாதனை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட், மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply