திருவண்ணாமலை கோயிலில் கோலாட்டம் ஆடியபடியே கிரிவலம் வந்த பெண்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 14 கிலோ மீட்டர் தூரம் கோலாட்டம் ஆடியபடியே 121 பெண்கள்  கிரிவலம் வந்தனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது.  திருவண்ணாமலை அண்ணாமலையார்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 14 கிலோ மீட்டர் தூரம் கோலாட்டம் ஆடியபடியே 121 பெண்கள்  கிரிவலம் வந்தனர்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரணக்கனக்கான பக்தர்கள் வந்து வழிபாடுவது செய்வது வழக்கம். மேலும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று லட்கணக்கான பக்தர்கள் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலையை 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சார்ந்த ஸ்ரீமன் நாராயணா பக்தி கோலாட்ட குழுவைச் சேர்ந்த 121 பெண்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோலாட்டத்திற்கான பூஜைகளை மேற்கொண்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் நிற்காமல் சிவபெருமான் பாடல் மற்றும் பல்வேறு பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு கோலாட்டம் ஆடிய படியே கிரிவலம் வந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.