முக்கியச் செய்திகள் தமிழகம்

கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்-தொல்.திருமாவளவன்

கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றுகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

தமிழகத்தை தாண்டி இதுபோல கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேசிய பார்வையோடு அணுக வேன்டிய தேர்தல். அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இனியும் தவறினால் மீண்டும் சங்பரிவாரம் அதிகாரத்தில் வரக்கூடும்.

சங்பரிவார் இயக்கங்கள் தமிழகத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். கவனம் செலுத்த வேண்டும். கேரளாவையும் தமிழகத்தையும் குறி வைத்திருக்கிறார்கள். தேசிய அளவில் அவர்களை எதிர்க்க கேரளாவும், தமிழகத்திலும் முன்மாதிரியாக உள்ளனர். இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு பெரியது.

இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் இடதுசாரி சிந்தனை இருக்க கூடாது என பாஜகவினர் முயற்சி மேற்கொள்கின்றனர். வலதுசாரிகளுக்கு எதிரான அனைவருமே இடதுசாரிகள்தான் .

அரைவேக்காட்டுதனமாக பேசினாலும் கூட பாஜகவை பற்றி பேசும் நிலையை சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ளனர். ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தப்பித்தவறி பாஜக 2024 ல் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது . நாட்டின் பெயரையே மாற்றுவார்கள் .

நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து இந்திய அளவில் இணைந்து ஓரே அணியாக பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பை தனிமைப்படுத்த வேண்டும் . இதில் இடதுசாரிகள் பங்களிப்பு மிக முக்கியம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தங்க மகன் நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை

G SaravanaKumar

“ஐ டோன்ட் கேர்” என இருந்தால் முன்னேறலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Web Editor

நீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்

எல்.ரேணுகாதேவி