திருப்பதியில் மாபெரும் தூய்மைப் பணி: 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருப்பதியில் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் தூய்மைப் பணியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தேவஸ்தான அதிகாரிகள்,…

திருப்பதியில் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் தூய்மைப் பணியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாபெரும் தூய்மைப் பணியின் முதல் நாளான இன்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, போலீஸ் அதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர். திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து தூய்மைப் பணிக்காக அவர்கள் பேருந்துகளில் புறப்பட்ட நிலையில் அந்த பேருந்துகளை முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

என்.வி.ரமணா, தர்மாரெட்டி ஆகியோர் உட்பட அனைவரும் திருப்பதி மலைக்கு பக்தர்கள் செல்ல பயன்படுத்தும் இரண்டு நடைபாதைகளையும் முழுமையாக சுத்தம் செய்து, தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.