முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருப்பதி குடை ஊர்வலம் – நியூஸ் 7 தமிழில் இன்று சிறப்பு நேரலை

சென்னை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று தொடங்கும் நிலையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் சிறப்பு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

 

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலையில் கவுனி தாண்டுகிறது.

யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. பின்னர் சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றடைகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் சிறப்பு நேரலை செய்யப்படுகிறது.

 

இன்று மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சிறப்பு நேரலையில், குடை ஊர்வலத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே நேரடியாக கண்டு பெருமாளை வழிபடலாம். இதையடுத்து, திருக்குடைகள் நாளை காலை (26-ஆம்தேதி) கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர் அகரம் சந்திப்பு திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் சென்றடைகிறது.

 

27-ஆம் தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு பாடி, முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு, திருமுல்லைவாயல் சென்றடைகிறது. 28-ஆம்தேதி காலை 6 மணிக்கு, ஆவடி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வழியாக செல்கிறது. திருமலை சென்றடையும் திருக்குடைகள் 29-ஆம் தேதி திருப்பாச்சூர் கனகம்மாசத்திரம் வழியாக கீழ் திருப்பதி செல்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 30-ஆம் தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

 

பக்தர்கள் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலை பின்தொடர்ந்து ஆன்மீகம் தொடர்பான செய்திகளை நேரலையாக பார்த்து மகிழுங்கள்..

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்

G SaravanaKumar

தேவர் குருபூஜை: அதிமுக-வில் தங்கக்கவசத்தை பெறப்போவது யார்?

EZHILARASAN D

மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

Arivazhagan Chinnasamy