32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் பக்தி செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத தரிசன முன்பதிவு அட்டவணை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத தரிசன முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் சுப்ரபாதம், தோமாலை, அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கள் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 20ஆம் தேதி காலை 10 மணி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்பின் நடைபெறும் குலுக்களில் டிக்கெட் பெரும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அல்லது ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கட்டுகள் இம்மாதம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

நவம்பர் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளை மெய் நிகர் சேவைகளாக ஆன்லைனில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு துவங்கி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். நவம்பர் மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதக்ஷனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி டிக்கெட்களை முன் பதிவு செய்யலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை நவம்பர் மாதம் வழிபட விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 21ஆம் தேதி காலை 11:00 மணி முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நவம்பர் மாதம் ஏழுமலையானை வழிபட தேவையான டோக்கன்கள் இம்மாத 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்படும்.

நவம்பர் மாதத்திற்கான ரூ. 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம் மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் அறைகளை முன் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கியும் திருமலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கியும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவை தேவையான பக்தர்கள்
தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in வெப்சைட்டில் அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் – முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை

Web Editor

அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள்  டிரான்ஸ்பர் ?

Halley Karthik

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

Web Editor