முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் – திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்!

கடந்த 2019 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தொற்று தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் அவலம் ஏற்பட்டது. அமல்படுத்திய ஊரடங்கால் உலக மக்களே பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. குறிப்பாகப் பள்ளிக் கல்லூரிகளை மூடியது, வழிபாட்டுத் தளங்களை மூடியது, மேலும் மக்கள் அதிகமாகக் கூடும் விசேஷங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது போன்ற பல்வேறு முயற்சிகளால் கொரோனா தொற்று பரவி வந்ததைக் கட்டுக்குள் கொண்டுவந்தது அரசு.

thirupathi new guidelines

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணங்களாக மக்களிடையில் தொற்றைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசியை நடைமுறைப் படுத்தியது போன்றவையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை, கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தொற்றினை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையாகத் திருமலை தேவஸ்தானம், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வருபவர்கள் தரிசன டிக்கெட்டை பெற்றிருந்தால் 24 மணி நேரத்திற்கு முன்பே அனுமதிக்கப்படுவர். மேலும் அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நன்பகல் 1 மணி அளவிலேயே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் புது வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தகைய புது வகையான விதிமுறைகள் பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

“நீர் நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டப்பட்டாலும் இடிக்கப்படும்” – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

Saravana Kumar

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Vandhana