திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாள்  சர்வ பூபால  வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான்  கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி…

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாள்  சர்வ பூபால  வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான்  கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது.

புறப்பாட்டை முன்னிட்டு கோயிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர்கள் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து உற்சவர்களுக்கு சர்வ திருவப்பரண சமர்ப்பணம், தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டது. பின்னர் மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

ரூபி. காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.