டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் – சவுரப் சவுத்ரி மற்றும் யாசாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர். முதல் தகுதிச்சுற்றில் 17வது இடம் பிடித்த யாசாஸ்வினி – அபிஷேக் இணை வெளியேறியது. முதலிடம் பிடித்த மனு பாக்கர் – சவுரப் சவுத்ரி இணை 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில், 380 புள்ளிகள் குவித்த மனு பாக்கர் – சவுரப் சவுத்ரி இணை, 4 புள்ளிகளில், இறுதிசுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ’ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 2 கோல்கள் அடித்தது. இதேபோல், 2வது பாதியில் மேலும் ஒரு கோல் அடிக்க, 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை 3 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.








