பவானி தேவிக்கு பிரதமர், ராகுல் பாராட்டு

உங்கள் முயற்சியை கண்டு நாடு பெருமை கொள்கிறது என தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா…

உங்கள் முயற்சியை கண்டு நாடு பெருமை கொள்கிறது என தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். தமது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி, டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார்.

 

இந்நிலையில், பவானி தேவிக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நீங்கள் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தீர்கள், அதுதான் முக்கியம் என்றும், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது என்றும் மோடி பதிவிட்டுள்ளார்.

 

 

இதேபோன்று, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், உங்களது முயற்சியைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது என்றும், வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படி என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.