நெல்லையில் வெள்ளத்தில் நடந்த சீமந்த விழா – வைரலாகும் வீடியோ!

திருநெல்வேலியில் கனமழையிலும் நடந்தேறிய சீமந்த விழாவின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு திருவிழா நேற்று (டிச. 17) இரவு நடைபெற்றது. தொடர்ந்து…

திருநெல்வேலியில் கனமழையிலும் நடந்தேறிய சீமந்த விழாவின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு திருவிழா நேற்று (டிச. 17) இரவு நடைபெற்றது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால், ரோஸ் மஹால் என்னும் மண்டபத்தின் அருகே உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதையும் படியுங்கள் : தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

சீமந்த விழா நடைபெறும் மண்டபத்தில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையிலும்,  உறவினர்களுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த தண்ணீர் மண்டபத்துக்கு உள்ளே புகுந்ததால் விழாவிற்கு வந்திருந்தவர்கள் நாற்காலிகள் மீதும், மாடியில் நின்றும் விழாவினை கண்டு ரசித்தனர்.

குறிப்பாக  போட்டோ வீடியோ கலைஞர்கள் மணமகன் மணமகளை தண்ணீரில் நிற்க வைத்து போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

https://twitter.com/Aarthipillai18/status/1736445147678986288

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.