இழப்பீடு வழங்காத யுரேகா தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர் ஆகிய இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாத்துமுத்து ஜெகராள் கடந்த 2018 ஆம் ஆண்டு யுரேகா தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் R.O தண்ணீர் சுத்திகரிப்பான் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, Ro தண்ணீர் சுத்திகரிப்பானை பழுதுகளை நீக்க இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தண்ணீரை அந்த இயந்திரம் சரியாக சுத்திகரிக்காத தண்ணீர் சுத்திகரிப்பானில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக யுரேகா தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பானை சரி செய்யவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சீன உணவகத்தில் ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அதனை சரி செய்து தராததால் பாத்து முத்துவிற்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க யுரேகா தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஓராண்டாகிய நிலையில் இழப்பீடு வழங்காத யுரேகா நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் சர்விஸ் இன்ஜினியர் ஆகிய இருவருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் உத்தரவிட்டுள்ளது.








