பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல…

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  மேலும் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல்  பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதையடுத்து இதுதொடர்பாக பல பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் கடந்த மே 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுபுறம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.